Advertisement

Government job is often referred as sluggish and bed of roses. Is that true!

Government job is often referred as sluggish and bed of roses. Is that true! Government job is often referred as sluggish and bed of roses. Is that true!

இதில் அரசாங்க அதிகாரி என்று பீத்திக்கொள்வது வேறு. இப்படி வசனம் இடம்பெறவும், அது பெருமளவு பிரபலமாகவும் என்ன காரணம்?

இதில் அரசாங்க அதிகாரி என்று பீத்திக்கொள்வது வேறு. இப்படி வசனம் இடம்பெறவும், அது பெருமளவு பிரபலமாகவும் என்ன காரணம்?

IAS தேர்வாகி ஒருவர் வகிக்கும் இரண்டாம் நிலை பதவிதான் Collector/district magistrate இப்பதவிக்கான மற்றும் ஒரு தேர்வுமுறை உண்டு. State Civil Serviceஇல் தேர்வாகி பல வருட பணியாற்றலுக்கு பின் பதவி உயர்வின் வாயிலாக ஒருவர் இந்த பதவிக்கு தேர்வாகுவார். இது கிட்டத்தட்ட ஒருவரின் சராசரி 20 ஆண்டுகால சேவைக்கு பின்னரே உறுதியாகும். அவ்வாறாக தேர்வானவர்தன் Rajendra Bhatt, the collector/district magistrate of Bhilwara, Rajasthan.

தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 240 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது பில்வாரா. இது ஒரு ஜவுளி உற்பத்தி நகரம். COVID19 செய்தியாக மட்டுமே பெருமளவிலான இந்தியாவை மிரட்டிக்கொண்டிருந்த நேரம், ராஜஸ்தானின் பில்வாராவில் நிலைமை வேறாக இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவின் COVID19 எண்ணிக்கை நூறுக்கும் குறைவாக இருக்க பில்வாரா பதிவு செய்த எண்ணிக்கை 21. இந்தியாவின் முதல் large outbreak area.

இன்னும் சில வருடங்களில் பணிஓய்வு பெறப்போகும் Rajendra Bhatt 6 அம்சங்களை கொண்ட திட்டத்தை வகுத்தார். இந்தியா lock-down அறிவிக்கும் நான்கு நாட்களுக்கு முன்னரே Bhilwara மூடப்பட்டது. Sec 144 அமல்படுத்தி lock-down செய்ததோடு Epidemic and disaster management law உதவியோடு Bhilwara seal செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பில்வாராவும் பகுதிவாரியாக பிரிக்கப்பட்டது

தன்னார்வ தொண்டர்கள் உதவியோடு 6 பகிரலை பகுதிகள் தேர்வானது

COVID 19 பாதிப்பிற்குள்ளாகியிருக்கக்கூடிய மனிதர்களுடன் தொடர்பிலிருந்தோர் தேடல் தீவிரமாக முடக்கிவிடப்பட்டது

Influenza-like illness அறிகுறி உள்ள மனிதர்களை கண்டறிய வீட்டுக்கு வீடு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது

அவ்வாறாக அறிகுறிகள் கண்டறியப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 14000. இவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு, அதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக தினமும் இருமுறை வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தீவிர அறிகுறி உள்ளவர்களை தனிமை படுத்த தனியார் மருத்துவமனையும் தனியார் விடுதிகளும் கையகப்படுத்தப்பட்டது

ஒட்டுமொத்தமாக சீல் செய்யப்பட்டதால் அரசாங்கமே சமைத்த உணவை விநியோகித்தது

இப்படி தீவிரமாக இயங்கியதன் விளைவாக நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. பில்வாராவில் பத்து நாட்களுக்கு மேலாக எந்த புது நோய் தோற்றும் பதிவாகவில்லை. இது ஒரு success story.



இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை இது ஒரு சாதாரண செயல்பாடு என்று ராஜேந்திர பட் கூறுகிறார். இது ஒரு சுய உந்துதல் மற்றும் தீவிர செயல்பாட்டின் விளைவு மட்டும் அல்ல. இந்த Rajendra Bhat மற்ற அரசு அதிகாரிகளுடன் கொண்டிருந்த நல்லுறவினால் மட்டுமே சாத்தியமானது. District collectorate பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவையும் தாமதம் இல்லாமல் மற்ற அரசு அதிகாரிகள் நிறைவேற்றியதன் உந்துதல் இந்த நல்லுறவுதான் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

அமைதியும் பொறுமையும் உருவான மாணிக்கம் தன் தங்கையிடம் ஒருவர் தவறாக நடந்துகொள்ள பாஷாவாக மாறும் அந்த காட்சியை நினைவுகூறுகிறது இந்த District Magistrateஇன் செயல்பாடு.

அரசு அதிகாரம் என்பது ஒரு சீரான வருமானமம், பெருமைக்குரிய அடையாளம் மட்டும் அல்ல. அது உணர்வுபூர்வமாக நேசிக்கப்படவேண்டிய பனி, தூய்வின்றி இயங்கவேண்டிய அமைப்பு, தொடர்ந்து மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டிய இயந்திரம்

Self-motivation, dedication, proactive approach, problem solving போன்ற பல அணுகுமுறைகளும் Rajendra Bhat போன்ற அதிகாரிகளின் சிந்தனைக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது. இவ்வாறாக செயல்படும் ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் பீதிகொள்ளதன் செய்வார்கள். இவ்வாறாக செயல்படாமல் அரசு பணியில் அமர்ந்துவிட்டோம் என்ற ஒரே காரணத்தால் பீத்திக்கொள்ளும் சிலரால்தான் அரசு இயந்திரம் அவ்வப்போது பரிகாசிக்க படுகிறது, இந்த வசனம் போல...

true!

Post a Comment

0 Comments